Wednesday 14 April 2021

வாருங்கள் நண்பர்களே! பணம் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக்கொள்வோம்

வாருங்கள் நண்பர்களே! பணம் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக்கொள்வோம்








அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

நண்பர்களே! நம் வாழ்க்கையில் இன்று அடிப்படை தேவைகளுள் ஒன்றாக இருப்பது பணம் தான். நம் அத்தியாவசிய தேவைகளான நீர், காற்று, நிலம் பயன்படுத்தவே பணம் தேவைப்படுகிறது. மனிதனின் பிறப்புக்கு முன்னும்  பணம் தேவை, இறந்த பின்னும் பணம் தேவை. 

நாம் இன்னும் ஏழையாக இருக்க முக்கிய காரணம். 

நம்மில் பெரும்பாலானவர்கள் பணம் அதிகம் வைத்து இருந்தால் பணக்காரர்கள் என்று நினைக்கிறோம். ஆனால், அது உண்மை இல்லை. பணம் எளிதில் கரைந்துவிடும். இன்று என்னிடம் இருந்தால் நாளை உங்களிடம் தங்கும். பணம்  தற்காலிக சொத்து. பணத்தை நம்மிடம் நிரந்தரமாக தக்க வைக்க நமக்கு தேவையானது பணம் அல்ல சொத்து தான். 

இன்று நமக்கு தேவையானது அழிக்க முடியாத நிலையான சொத்து. போதிய விழிப்புணர்வு இல்லாததால் தான் அதிகமான மக்கள் இன்று ஏழ்மை என்னும் வறுமையில் வாடுகின்றார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டும் அதிகம் பணம் சம்பாதிக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பணத்தை பற்றிய அறிவு இல்லாதது தான் காரணம், பணத்தை பற்றி எவ்வளவு விஷயம் தெரிந்து வைத்து இருக்கிறோம் என்பது தான் முக்கியம். 

தலைமுறையை அழிக்கும் மூடநம்பிக்கைகள்

நம் பெற்றோர்கள் நினைப்பது, நான் தான் எழுத படிக்காமல் ஏதோ கிடைத்த வேலைக்கு குறைந்த சம்பளத்திற்கு கஷ்டப்படுகிறேன், என் பிள்ளையாவது நல்லா படித்து நல்லா சம்பளத்தில் வேலைக்கு போய் சந்தோஷமாக இருக்கணும் நினைக்கிறாங்க. ஆனால், இங்கு படித்து முடித்த பிறகு கிடைப்பது வேலைக்கு போக வேண்டும் என்ற அறிவு. நாம் படித்து பெற்ற பட்டறிவை வைத்து முறைசார் கல்வியறிவு தான் கிடைத்தது. அந்த அறிவை வைத்து பணம் சம்பாதிக்கவும் தெரியல, பணம் சம்பாதிக்கவும் பள்ளி கல்லூரியிலும் யாரும் கற்றுக் கொடுக்கவும் இல்லை. 

மனிதனின் தகுதி, ஆளுமை திறமையை வளர்த்து எடுக்க பள்ளி கல்லூரிகளில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு திறமை பற்றாக்குறையாக இருக்கிறது. இதனால் படித்து முடித்து வரும் மாணவர்கள் தங்கள் திறமையை கண்டறியாமல் வேலைக்கு செல்வதால் முதலாளி அவர்களின் திறன் அறிவை நன்கு பயன்படுத்தி நல்ல லாபம் ஈட்டுகிறார்கள். 

பணக்காரர்கள் பணம் சம்பாதிக்கும் ரகசியம்

பணம் அதிகம் சம்பாதிக்கிற முதலாளிகள் தங்கள் தொழிலாளிக்கு எப்படி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ரகசியத்தை யாருக்கும் சொல்லிக் கொடுக்க விரும்புபவது இல்லை. தனக்கு யாரும் போட்டியாக இருக்க கூடாது, தான் மட்டும் சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலை, இதனால் தான் பணக்காரர்கள் மேலும் பணம் சம்பாதிக்கிறார்கள், ஏழைகள் இன்னும் ஏழையாக இருக்கிறார்கள். 

ஏழைகள் தாங்கள் சம்பாதிக்கிற பணத்தை முதலில் கடனுக்காகவும் செலவுக்காகவும் பயன்படுத்துகிறார்கள், அதிலும், ஆடம்பர செலவுக்காக, தேவை இல்லாதத வீண் செலவுக்காக, தேவைக்கு மீறி அதிகம் கடன் வாங்குகிறார்கள், கடனை அடைக்க மேலும் கடன், குடும்பத்தில் வரவு செலவு திட்டம் கணக்கு பார்ப்பது இல்லை, பணம் சேமிக்கும் பழக்கம் இருப்பது இல்லை, ஆனால் கடன் வாங்கும் வழக்கம் மாறுவதில்லை.

பணம் சம்பாதிப்பவர்கள் செலவை குறைத்தும் சேமிப்பை அதிகரித்தும் பணத்தை மறுமுதலீடு செய்தும் பணத்தை தரும் சொத்தை சேர்த்தும் பெரும் செல்வம் சேர்க்கிறார்கள். தங்கள் தொழில் ரகசியத்தை தங்கள் தலைமுறைக்கு சொல்கிறார்கள். மேலும் வரவு செலவு கணக்கு சரியாக திட்டமிட்டு பாதுகாப்பாக புத்திசாலி தானமாக பயன்படுத்துகின்றார்கள். 


No comments:

Post a Comment